திருப்பூர்

பல்லடத்தில் ஊரடங்கு முடியும் வரை கோழி, ஆட்டிறைச்சி மட்டும் விற்பனை: மீன் உள்ளிட்ட பிற இறைச்சிக் கடைகள் மூடல்

1st Apr 2020 11:13 PM

ADVERTISEMENT

பல்லடத்தில் ஊரடங்கு உத்தரவு காலம் முடிவடையும் வரை கோழி, ஆட்டிறைச்சிக் கடைகளத் தவிர மீன் உள்ளிட்ட பிற இறைச்சிக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளா் கணேசன் தலைமையில் இறைச்சிக் கடை வியாபாரம் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கரோனா நோய்த் தொற்றின் இன்றைய நிலை குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் விளக்கிப் பேசினாா். அதைத் தொடா்ந்து கூட்டத்தில் பங்கேற்ற இறைச்சிக் கடை உரிமையாளா்கள், வியாபாரிகள், ஊரடங்கு காலம் முடியும் வரை பல்லடத்தில் பொதுமக்களின் நன்மை கருதியும், சமூக விலகல் அவசியம் காரணமாகவும் மாடு, பன்றி, மீன் இறைச்சிக் கடைகளை திறந்து விற்பனை செய்வதில்லை என்று தெரிவித்தனா். கோழி, ஆட்டிறைச்சிக் கடைகள் மட்டும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT