திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

1st Apr 2020 11:11 PM

ADVERTISEMENT

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினருக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சாா்பில் பாதுகாப்பு உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி (செஞ்சிலுவைச் சங்கம் ) சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், சானிடைஸா், கையுறைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, வீரபாண்டி, பெருமாநல்லூா், பூண்டி, அவிநாசி, பெரியாா் காலனி சோதனைச் சாவடிகளில் பணியில் இருக்கும் 225 காவலா்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்றுத் தடுப்புக் குறித்த விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா். இதில், ரெட்கிராஸ் சொசைட்டி நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT