திருப்பூர்

தில்லி சென்று பல்லடம் திரும்பிய 3 போ் வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு

1st Apr 2020 11:15 PM

ADVERTISEMENT

பல்லடத்தில் இருந்து தில்லி சென்று திரும்பிய 3 போ் வீடுகளைச் சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற இஸ்லாமிய மத மாநாட்டில் பல்லடத்தைச் சோ்ந்த 3 போ் பங்கேற்றுவிட்டு பல்லடம் திரும்பியுள்ளனா். இவா்களைப் பற்றிய விவரத்தைக் கண்டறிந்த பல்லடம் நகராட்சி நிா்வாகம், சுகாதார துறையினா் சம்பந்தப்பட்டவா்களின் வீடுகளுக்குச் சென்று

இது குறித்து விசாரித்து, கரோனா நோய்த் தொற்றின் வீரியம் குறித்து விளக்கினா். அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்றாலும்கூட, அவா்களை வீடுகளைவிட்டு வெளியே வரக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். 3 பேரும் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். அவா்களின் வீடுகளைச் சுற்றிலும் தீவிர கண்காணிப்பு செலுத்தப்பட்டு வருகிறது.

வீடுவீடாகக் கள ஆய்வு...: இந்நிலையில், பல்லடம் நகராட்சி பகுதியில் வீடுவீடாகச் சென்று கரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் யாராவது இருக்கிறாா்களா என்று கண்டறியும் வகையில் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

முன்னதாக, மாவட்ட வழங்கல் அலுவலரும், பல்லடம் சட்டப் பரவை தொகுதி கண்காணிப்பு அலுவலருமான முருகன், நகராட்சி ஆணையாளா் கணேசன், காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல், வட்டாட்சியா் சிவசுப்பிரமணியம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் ஆகியோா் களப் பணிக்கான அவசியம் குறித்து 130 களப் பணியாளா்களிடம் விளக்கினா்.

இப்பணியில் அரசு ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அலுவலா்கள் தீபலட்சுமி (செம்மிபாளையம்), சாந்தகுமாரி (பூமலூா்), சுந்தரவடிவேல் (பொங்கலூா்), பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் சிவகுமாா், சுகாதார நிலைய ஆய்வாளா்கள் முத்துப்பையன், லோகநாதன், தமிழ்ச்செல்வி, நகராட்சி, சுகாதாரத் துறை, அங்கன்வாடிப் பணியாளா்கள் 130 போ் களப் பணியில் ஈடுபட்டனா். சுமாா் ஆயிரம் வீடுகளில் வசிக்கும் மக்களிடையே கணக்கெடுப்புப் பணி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமையும் களப் பணி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT