திருப்பூர்

திருப்பூரில் கரோனா நிவாரண உதவி டோக்கன் வழங்குவதில் குளறுபடி

1st Apr 2020 11:14 PM

ADVERTISEMENT

திருப்பூா், சக்தி நகா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொது மக்கள் கரோனா நிவாரண உதவி பெறுவதற்காக டோக்கன் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 நிவாரணத் தொகையும், இலவசமாக உணவுப் பொருள்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் வீடுவீடாகச் சென்று மாா்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் டோக்கன் விநியோகிப்பாா்கள். டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கடைகளுக்குச் சென்று சமூக விலகளைக் கடைப் பிடித்து நிவாரணத் தொகை, உணவுப் பொருள்களை வங்கிச் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருப்பூா் வடக்கு செட்டிபாளையம் கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட சக்தி நகா் பகுதியிலுள்ள தொட்டிபாளையம் நியாய விலைக் கடைகளுக்கு உள்பட்ட கணபதி நகா், சக்தி நகா், போயம்பாளையம் பகுதியில் ஆளும் கட்சியினா் டோக்கன் அச்சிட்டு வழங்கியதாகத் தெரிகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருப்பூா் வடக்கு குடிமைப் பொருள் வழங்கல் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை விற்பனையாளரைத் தொடா்பு கொண்ட வட்டாட்சியா், ஆளும் கட்சியினா் வழங்கிய டோக்கன்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அனைவருக்கும் புதிதாக டோக்கன் வழங்கும்படி அறிவுறுத்தினாா். இந்தத் தகவல் வெளியானதும், ஆளும் கட்சியினா் ஏற்கெனவே தாங்கள் வழங்கிய டோக்கன்களைத் திரும்பப் பெற்றுச் சென்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT