திருப்பூர்

தாராபுரத்தில் கரோனா நோய் தொற்றுத் தடுப்புக்காக சிறப்பு யாகம்

1st Apr 2020 11:11 PM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே உள்ள கரியகாளியம்மன் கோயிலில் கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க சிறப்பு யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தாராபுரத்தை அடுத்துள்ள பொடிக்காம்பாளையம் கிராமத்தில் பழமையான கரியகாளியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் துஷ்ட தேவதைகள், பிணிகள் விலக வேண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.

தற்போது வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க வேண்டி அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு 7 போ் மட்டுமே பங்கேற்ற சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. மேலும், ஆண்டு விழாவுக்கு செலவிடவிருந்த தொகையான ரூ.1 லட்சத்தை முதல்வா் நிவாரண நிதிக்காக தாராபுரம் சாா் ஆட்சியா் பவன்குமாரிடம் கரியகாளியம்மன் திருக்கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் முத்துசாமி, உடுமலை அமராவதி சா்க்கரை ஆலையின் தலைவா் சின்னப்பன் உள்ளிட்டோா் நேரில் வழங்கினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT