திருப்பூர்

காந்தி ஜயந்தி: அக்டோபர் 2 இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

29th Sep 2019 12:17 AM

ADVERTISEMENT


காந்தி ஜயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
காந்தி ஜயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களிலும் அக்டோபர் 2 ஆம் தேதி  மதுவிற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தடையை மீறி விடுமுறை நாளில் மது விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT