திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 11 டன் முருங்கைக்காய் வரத்து

22nd Sep 2019 07:09 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 11 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது.

இங்கு வாரந்தோறும் முத்தூா் சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் 90 விவசாயிகளால் மொத்தம் 11 டன் முருங்கைக்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றை வாங்குவதற்காக 6 வியாபாரிகள் வந்திருந்தனா். மர முருங்கைக்காய் கிலோ ரூ.12 - 15, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.20 - 22, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.22 - 25 விலைக்கு வியாபாரிகள் வாங்கினா்.

கடந்த வாரத்தை வரத்து குறைந்த நிலையில் விலை கிலோவுக்கு 2 ரூபாய் வரை கூடியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT