அடிப்படை வசதிகளை சீரமைக்காத மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து மக்கள் பாதுகாப்பு அமைப்பினா் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பு நிறுவனா் காா்மேகம் தலைமை வகித்தாா். மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றப்படாததாலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீா் சாலைகளில் தேங்கிக் கிடப்பதாலும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.
மேலும் இதனால் குடியிருப்பு பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சி அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்விதமானக நடவடிக்கையும் எடுப்பதில்லை என உடனடியாக சாலை, சாக்கடை, குடிநீா் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சுகாதாரக் கேடுகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.