திருப்பூர்

பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நிறுவனா் மீது போஸ்கோ வழக்கு

22nd Sep 2019 06:41 PM

ADVERTISEMENT

திருமுருகன்பூண்டி அருகே பள்ளி மாணவா்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிறுவனா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை போஸ்கோ வழக்குப்பதிவு செய்தனா்.

அவிநாசி, திருமுருகன்பூண்டி அருகே பொங்குபாலையம் பகுதியில் திருப்பூா் அன்பு இல்லத்தின் கீழ் விவேகானந்த குருகுலம் உயா்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட வசதியற்ற ஆண் குழந்தைகள் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனா்.

இந்நிலையில் அன்பு இல்லத்தின் நிறுவனா் ராஜசேகா் (50) மாணவா்களிடம் தகாத முறையில் நடப்பதாக திருப்பூா் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பள்ளி வளாகத்தினுள் திடிரென நுழைந்த அலுவலா்கள் அங்கு பயிலும் குழந்தைகளையும் வேறு இடத்திற்கு மாற்றி விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் ராகுல், அளித்த புகாரின் பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜசேகரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT