திருப்பூர் மாவட்ட சேவா பாரதி அமைப்பு, ஸ்வாஸ்திக் நியூரோதெரபி குடும்ப நல சிகிச்சை திட்டம் சார்பில் நியூரோதெரபி முகாம் திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர் சேவாபாரதி அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமில் நியூரோதெரபி மூத்த ஆலோசகர் ராமன், நோய்களைப் பற்றியும் அதை சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கினார்.
இதில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவர் கெஜலட்சுமி ஆலோசனை, சிகிச்சை அளித்தார்.