திருப்பூர்

தாராபுரம் அருகே ஆம்னி வேன் மீது வாகனம் மோதல்: 8 பேர் காயம்

17th Sep 2019 09:18 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஆம்னி வேன் மீது விபத்து மீட்பு வாகனம் மோதியதில் கர்ப்பிணி உள்பட 8 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர். 
கோவை, உக்கடம் பகுதியில் இலைக் கடை நடத்தி வருபவர் செல்லதுரை. இவரது மகள் வசந்தி (25). இவருக்கும், தென்காசியைச் சேர்ந்த விஜய் (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வசந்தியின் வளைகாப்பு விழா தென்காசியில் நடைபெற்றது. இதற்காக வசந்தியை அவரது உறவினர்கள் ஆம்னி வேனில் கோவைக்கு அழைத்து வந்தனர். இந்த வேனை வசந்தியின் கணவர் விஜய் ஓட்டினார்.
 இந்த வாகனம் தாராபுரம் - கோவை சாலையில் வரப்பாளையம் அருகே திங்கள்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த விபத்து மீட்பு வாகனம் எதிர்பாராதவிதமாக ஆம்னி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் வசந்தி, விஜய், அவர்களது உறவினர்களான தீபா (19), கார்த்தி (31), பானுமதி (23), அழகம்மாள் (40), வனிதா (20), நிரஞ்சன் (5) ஆகிய 8 பேரும் பலத்த காயமடைந்தனர். 
 இவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மீட்பு வாகன ஓட்டுநரான வடிவேலிடம் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT