வெள்ளக்கோவில் அருகே உள்ள இலுப்பைக்கிணறு, மயில்ரங்கம் பகுதிகளில் கனமழை பெய்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு லேசான தூறலுடன் மழை ஆரம்பித்தது. வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியைச் சேர்ந்த இலுப்பைக்கிணறு, மூத்தநாய்க்கன்வலசு, குருக்கத்தி, மயில்ரங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளான வட்டமலைக்கரை ஓடை, தாசவநாயக்கன்பட்டி, கொமரபாளையம், தண்ணீர் பந்தல் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை மழை பெய்தது. வேலப்பநாய்க்கன்வலசு ஊராட்சியில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மழை நீடிக்கும் என்பதால் வருவாய்த் துறை, மின்சார வாரியத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.