வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வீரக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேக 9ஆம் ஆண்டு விழா

DIN | Published: 11th September 2019 06:55 AM

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேக 9 ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழாவையொட்டி, காலை 8 மணியளவில் செல்லாண்டியம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், ஹோம பூஜை நடைபெற்றது. பகல் 12 மணியளவில் வீரக்குமார சுவாமிக்கு யாக பூஜை, 108 சங்கு, சந்தன அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. பின்னர் இரவு 7 மணிக்கு மேல் பக்தர்கள் புடைசூழ சுவாமி திருவீதி உலா நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது.  பல்லடம், பனிக்கம்பட்டி கலைக்குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. கோயில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள், கோயிலைச் சேர்ந்த உள்ளூர் ஆந்தை, தனஞ்செய, மாட குலத்தவர்கள் உள்பட 11 குலத்தவர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வெள்ளக்கோவிலில் ரூ.12.42 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை


சேகாம்பாளையம் அரசுப் பள்ளியில் தேர்வு மைய நுழைவுச் சீட்டு அறிமுகம்

போலி நகைகளை அடகு வைக்க முயன்ற 2 பேர் கைது
திருப்பூரில் தந்தி சட்ட நகலை எரிக்க முயன்ற 51 விவசாயிகள் கைது
மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது