திருப்பூர்

வேனில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: ரூ.5 ஆயிரம் அபராதம்

10th Sep 2019 10:51 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேனில் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
  ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை தமிழக அரசு தடை செய்துள்ளது. தடையை மீறி விற்பனை செய்பவர்கள், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில் காங்கயம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது வேனில் காங்கயம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக திங்கள்கிழமை கொண்டு வந்திருந்த 270 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். 
  மேலும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT