திருப்பூர்

தாராபுரத்தில் செப்.12 இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

10th Sep 2019 11:20 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம் வரும் வியாழக்கிழமை (செப். 12) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மின்வாரிய செயற்பொறியாளர் செ.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழகம், பல்லடம் மின் பகிர்மான வட்டம், தாராபுரம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. 
தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT