திருப்பூர்

தங்கப் பதக்கம் வென்ற உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள்

10th Sep 2019 10:51 AM

ADVERTISEMENT

பாரதியார் பல்கலைக்கழக அளவில் பருவத் தேர்வில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கங்கள் வென்ற உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட இறுதித் தேர்வுகளில் உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள் உள்பட 11 சிறப்பிடங்களைப் பெற்றனர்.
 இளநிலை புள்ளியியல் பாடப்பிரிவில் கே.சனாஃபரீன், முதுநிலைப் பாடப் பிரிவுகளில் சுற்றுலாவியல் பாடத்தில் எஸ்.சங்கர்குமார், வேதியியல் துறையில் வி.வீரகுமார், புள்ளியியல் பாடப் பிரிவில் கே.தீபிகா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள் தவிர வேதியியல் பாடப்பிரிவில் ஆர்.ரேணுகாதேவி மூன்றாமிடம், எஸ்.ஆதிரா நான்காம் இடம், இயற்பியல் பாடத்தில் எஸ்.பிரியங்கா நான்காம் இடத்தை பெற்றுள்ளனர்.  தங்கம் வென்றவர்கள், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி பொறுப்பு முதல்வர் ச. பொன்முடி, கல்லூரி ஆட்சிக் குழுவினர், துறைத் தலைவர்கள், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT