திருப்பூர்

வன உயிரின வார விழா

7th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

உடுமலை ஆர்ஜிஎம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஆரண்யா அறக்கட்டளை அறங்காவலர் நந்தினி ரவீந்திரன் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசு வனத் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட்டன. வன உயிரினங்களைக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில் உடுமலை வனச் சரகர் தனபால், உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 180 பேர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT