திருப்பூர்

பொங்கலூரில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பெரு விழா

7th Sep 2019 07:19 AM

ADVERTISEMENT

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பெரு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வுப் பெரு விழா பொங்கலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார். விழாவுக்கு தலைமை வகித்து  வேளாண்மை தொழில் நுட்ப கண்காட்சியைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது: 
விவசாயத்துக்கு முக்கியத் தேவை நீர். இந்த நீரை எவ்வாறு சேமிப்பது, சேமிக்கப்படும் நீரினை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது தற்போதைய கால சூழ்நிலையில் முக்கியமானதாகும். நீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீர் சேகரிப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இயக்கம் (ஜல் சக்தி அபியான்) என்ற இயக்கத்தை நாடு முழுவதும் பிரதமர் செயல்படுத்தி வருகிறார். 
அனைவரும் வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு மழை வளத்தைப் பெருக்கவும் பாடுபட வேண்டும் என்றார். 
விழாவில் தண்ணீரின் நிலைப்பாடும் மற்றும் அதன் தேவைகள் குறித்த சிறப்பு கையேடு வெளியிடப்பட்டது. தோட்டக் கலைத் துறை சார்பில் 31 பேருக்கு ரூ. 24லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நீர் மேலாண்மை மைய இயக்குநர் எஸ்.பன்னீர்செல்வம், விரிவாக்க கல்வி இயக்குநர் ரவிகுமார் தியோடர், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா, வேளாண்மை துறை இணை இயக்குநர் எஸ்.மனோகரன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கே.எஸ்.சுகந்தி, பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, நபார்டு வங்கி மேலாளர் ராஜூ, பல்லடம் வட்டாட்சியர் சாந்தி, பொங்கலூர் ஒன்றிய முன்னாள் தலைவர் எஸ்.சிவாச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT