திருப்பூர்

இலவச தையல் இயந்திரம் பெற செப்டம்பர் 20க்குள்விண்ணப்பிக்கலாம்

7th Sep 2019 07:22 AM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டத்தில் ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் இலவச தையல் இயந்திரம் பெற செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சமூக நலத் துறையின் மூலம் ஆதரவற்றவர், கணவனால்  கைவிடப்பட்டோர், விதவை மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, திருப்பூர் மாவட்டத்தில்  2019-20ஆம் ஆண்டிற்கான இலவச தையல் இயந்திரம் பெற விரும்பும் நபர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமலும், 20 முதல் 40 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், 6 மாதத்துக்குக் குறையாமல் தையல் பயிற்சி சான்று, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT