திருப்பூர்

அவிநாசியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 07:19 AM

ADVERTISEMENT

தொழிற்சங்க சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் அருகே தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 ஆர்ப்பாட்டத்தில், தொழிற்சங்க சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலைக்கு மாதம் ஊதியம் ரூ.18ஆயிரம் வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயி விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக  உயர்த்தி,  நாள் ஒன்றுக்கு ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வீடு உள்ளிட்டவை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT