திருப்பூர்

வெள்ளக்கோவிலில் வங்கிகளில்  பாதுகாவலர்களை நியமிக்கக் கோரிக்கை

4th Sep 2019 07:18 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் வங்கிகளில் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 வெள்ளக்கோவில் நகரில் 15 அரசு, தனியார் வங்கிகள், 10 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள நூல் மில்கள், பல்வேறு தொழில் நிறுவனத்தினர் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை வங்கிகள் மூலமே மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் வேலை நேரத்தில் வங்கிகளின் நுழைவு வாயிலில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் இருந்து வந்தனர். இதனால் வங்கி நிர்வாகத்தினருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு இருந்தது.
 ஆனால் தற்போது வங்கிகளில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் பணம் திருட்டுப் போன பிறகு அடையாளம் கண்டுபிடித்து பணத்தைப் திரும்பப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
 இது குறித்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சதாசிவம் கூறியதாவது:
 வங்கியில் பாதுகாவலர்கள் இருந்தது வயதானவர்களுக்கு உதவிகரமாக இருந்தது. பணம் எடுக்கத் தடுமாறினால் கூட அவர்கள் உதவி செய்வார்கள். முன்னாள் ராணுவ வீரர்கள் பணியில் இருந்தால் திருடர்களுக்கும் பயம் இருக்கும்.
 வங்கிக்குள் ஏதாவது திருட்டுச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக நுழைவு வாயில் கதவை அடைத்து அவர்களை பிடிக்க முடியும். எனவே வங்கிகளின் உயர் அதிகாரிகள் வங்கிகளுக்குப் பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT