திருப்பூர்

மானிய விலையில் மின்சாரம் வழங்க பாத்திர உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

4th Sep 2019 07:17 AM

ADVERTISEMENT

பாத்திர உற்பத்திக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என பாத்திர உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  திருப்பூர் வட்டார முழுக்கூலி பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க 20 ஆவது மகாசபைக் கூட்டம், 15 வேலம்பாளையம், மாரியம்மன் கோயில் கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ராயப்பன் தலைமை வகித்தார். செயலாளர் கதிரேசன், பொருளாளர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் துரைசாமி வரவேற்றார். இதில், பாத்திர தொழிலுக்கான மூலப்பொருள்கள், மானிய விலையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாத்திர தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் சேகர் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT