திருப்பூர்

பாஜக மாநிலத் தலைவரை கட்சிமேலிடம் முடிவு செய்யும்

4th Sep 2019 07:19 AM

ADVERTISEMENT

பாஜகவின் தமிழக தலைவரை கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
 திருப்பூரில் பின்னலாடைத் தொழில் துறையினர், பாஜகவினருடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 பாஜகவின் அமைப்பு தேர்தல் வரும் 11-ஆம் தேதி முதல் இம்மாத இறுதிவரை நடத்தப்படுகிறது. அதன்பிறகு மாவட்டம்,  மாநிலத்துக்கு என கட்சித் தேர்தலுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களைக் கொண்டு தேர்தலை நடத்துவார்கள்.
 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாவட்டத் தலைநகரங்களில் சிறப்பு அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு சேவைகள் செய்யும் விதமாக சேவை வாரம் கொண்டாட உள்ளோம். குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளோம். காந்தி ஜயந்தியை முன்னிட்டு கட்சி, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து பாத யாத்திரை நடத்த முடிவு செய்துள்ளோம்.
 காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்காமல் திமுக முடிவெடுத்துள்ளது. பாஜகவைப் பொருத்தவரை தங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்பை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். கட்சியில் அதற்கென்று வழிமுறைகள் உள்ளன. அதன்படி புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT