திருப்பூர்

திருநங்கைகள் போல நடித்து மிரட்டி பணம் வசூலித்தவர் மீது புகார்

4th Sep 2019 07:20 AM

ADVERTISEMENT

திருப்பூரில் திருநங்கைகள்போல நடித்து, பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் திருநங்கைகள் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர்.
 இது குறித்து திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் அளித்த புகார் மனு:
 திருநங்கைகளாகிய நாங்கள் சமூகத்தில் உரிய ஒழுங்குடன் வாழ்ந்து வருகிறோம். இத்தகைய சூழலில் திருப்பூர், பழைய பேருந்து நிலையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாபு எனும் நபர் திருநங்கை போல வேடமணிந்து பொதுமக்களை மிரட்டி, பணம் வசூல் செய்து வருகிறார்.
 இவரது செயல் பொதுமக்கள் முகம் சுழிக்க கூடிய அளவில் உள்ளது. பாபு ஒட்டுமொத்த திருநங்கைகள் சமூகத்தையே பொதுமக்கள் மத்தியில் இழிவாக சித்திரித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் பாபுவை திருநங்கைகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி 
வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT