திருப்பூர்

சம்பள நிலுவையைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

4th Sep 2019 07:19 AM

ADVERTISEMENT

ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக சம்பள நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைத் தலைவர்கள் வாலீசன், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் ஏ.முகமது ஜாபர், ஓய்வுபெற்றோர் அமைப்புச் செயலாளர் பா.செளந்தரபாண்டியன், கிளைச் செயலாளர்கள் குமாரவேல், தங்கராஜ், வின்சென்ட் ஆகியோர் 
உரையாற்றினர்.
 இதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடையச் செய்து, தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசையும், பிஎஸ்என்எல் உயர்மட்ட அலுவலர்களையும், ஊழியர் சம்பளத்தை குறித்த காலத்தில் தராமல் இழுத்தடிப்பதைக் கண்டித்தும் ஊழியர்கள் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT