திருப்பூர்

காங்கயத்தில் இன்று மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்

4th Sep 2019 07:20 AM

ADVERTISEMENT

காங்கயத்தில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் புதன்கிழமை (செப். 4) நடைபெற உள்ளது.
திருப்பூர் மின் பகிர்மான வட்டம், காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் முதல் புதன்கிழமை நடைபெற்று வருகிறது.  செப்டம்பர் மாதத்துக்கான குறைதீர் கூட்டம்  காங்கயம் நகரப் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்.4) நடைபெற உள்ளது.
 இக்கூட்டத்தில்  மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் எம்.மருதாச்சலமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT