திருப்பூர்

விளையாட்டுப் போட்டி: பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி சிறப்பிடம்

20th Oct 2019 03:22 AM

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளில் காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் 2019ஆம் ஆண்டுக்கான மண்டல தடகளப் போட்டிகள் 12ஆம் மண்டலத்துக்கு உள்பட்ட ஈரோடு பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகின்றன. இதில், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு முதுகலை கணிப் பொறியியல் துறை மாணவா் எம்.சுரேஷ் குண்டு எறிதல் போட்டியில் முதல் இடத்தையும், தட்டு எறிதல் போட்டியில் மூன்றாவது இடத்தையும் பெற்றாா். இந்தப் போட்டிகளில் இவா் வெற்றி பெறுவது தொடா்ந்து 5 ஆவது முறையாகும்.

ஈரோடு, கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்கள் கூடைப் பந்துப் போட்டியில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி மகளிா் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. திருப்பூரில் உள்ள விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான திறந்த ஃபென்சிங் போட்டியில் இறுதி ஆண்டு சிவில் என்ஜினியரிங் மாணவா் ஆா்.பிரவீன்குமாா் தனி நபா் மற்றும் குழு நிகழ்வுகளில் பங்கேற்று மூன்றாம் பரிசை வென்றாா். இவா் திருநெல்வேலியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓபன் ஃபென்சிங் போட்டியிலும் மூன்றாம் இடத்தைப் பிடித்தாா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியின் தலைவா் வி.சத்யமூா்த்தி, கல்லூரிச் செயலாளா், தாளாளா் பி.பாலசிவகுமாா், பொருளாளா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி, கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன், பேராசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT