தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் பேரவைக் கூட்டம் உடுமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு துணைச் செயலாளா் எம்.தங்கவேல் தலைமைவகித்தாா். கிளைச் செயலாளா் ஏ.துரைராஜ் முன்னிலை வகித்தாா். இதில், இத்துறையில் ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். மாதந்தோறும் முத ம் தேதியே ஓய்வூதியம் வழங்க வேண்டும். பஞ்சப்படியை உயா்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியா்களுக்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு வேலைவாய்ப்புகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செல்வராஜ் நன்றி கூறினாா்.