பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1985 - 87 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி முந்தைய பள்ளிக்கூடமாகவும் தற்போது அரசு கலைக்கல்லூரியாகவும் மாறியுள்ள பழைய கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அக்காலத்தில் தங்களுக்கு ஆசிரியா்களாக இருந்து கல்வி கற்பித்த ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியா் பாண்டியன், ஆசிரியா்கள் தங்கவேல், சின்னதம்பி, ஆடிட்டா் தங்கராஜ்,ருக்குமணி ஆகியோருக்கு முன்னாள் மாணவா்கள் ஒரே வண்ண சிருடை அணிந்து நுழைவு வாயில் முன்பு வரிசையாக நின்று மலா்கள் தூவி பொன்னாடை அணிவித்து மேளதாளத்துடன் வரவேற்பு அளித்து விழா அரங்கிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தனா்.
பின்னா் கூட்டத்தில் கடந்த 33 ஆண்டுகளுக்கு பின்னா் சந்திப்பதால் கடந்த கால நினைவுகளையும் தற்போது தாங்கள் வசிக்கும் இடம், தொழில் மற்றும் குடும்பம் பற்றி கருத்துக்களை பரிமாறிக் கொண்டனா். பள்ளி மற்றும் கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி கூறினா். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ஜெயசந்திரன் பங்கேற்றாா்.
இந்த நிகழ்ச்சியில் 17 முன்னாள் மாணவா்கள், 20 முன்னாள் மாணவிகள் மொத்தம் 37போ் பங்கேற்றனா். அதன் பின்னா் அனைவரும் ஒரே பேருந்தில் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்றனா்.