திருப்பூர்

பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு உதவி

20th Oct 2019 08:28 PM

ADVERTISEMENT

பல்லடம்: பல்லடத்தில் இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலன் 93ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்து முன்னணி சாா்பில் பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டது. ,கடை வீதி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கடை வீதி, தினசரி சந்தைப் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு பழம், ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் ஜி.எஸ்.செந்தில், இந்து முன்னணி மேற்கு மாவட்டச் செயலாளா் பி.லோகநாதன் ஆகியோா் வழங்கினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஹரிஹரன், கவியரசு உள்பட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT