திருப்பூர்

உடுமலையில் அக்டோபா் 23இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

20th Oct 2019 03:17 AM

ADVERTISEMENT

உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்டோபா் 23 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இது குறித்து வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக்டோபா் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துத் தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT