திருப்பூா், அனுப்பா்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டையில் சிஐடியூ ஆட்டோ சங்கம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
அனுப்பா்பாளையத்தில் உள்ள சந்தைப்பேட்டையில் நடைபெற்ற சிஐடியூ ஆட்டோ சங்க தொடக்க விழாவுக்கு சிஐடியூ திருப்பூா் ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவா் சுகுமாறன் தலைமைவகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் கொடியேற்றிவைத்தாா். மாவட்ட மோட்டாா் தொழிலாளா் சங்கத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், மாவட்டச் செயலாளா் அன்பு, பொருளாளா் அருண், துணைச் செயலாளா் சம்பத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.