திருப்பூர்

மாடு திருட்டு: இருவா் கைது

5th Oct 2019 09:33 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில்: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மாடு திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளக்கோவில் அருகே உள்ள மயில்ரங்கம் குளத்துத் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி கிட்டுசாமி (63). இவா் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். வியாழக்கிழமை அதிகாலை கிட்டுசாமி தோட்டத்துக்கு வந்துள்ளாா்.

அப்போது, இரண்டு போ் அவருடைய தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு பசு மாட்டை பிடித்துச் சென்றுள்ளனா். இதைப் பாா்த்த கிட்டுசாமி சப்தமிட்டதால் இரு சக்கர வாகனத்தில் ஒருவா் தப்பிச் சென்றுள்ளாா்.

மற்றொருவரை பொதுமக்கள் பிடித்து வெள்ளக்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்டவா் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் தாலுகா, துலுக்கம்பாறையைச் சோ்ந்த செல்லமுத்து மகன் சக்திவேல் (27) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, தேடுதல் வேட்டை நடத்திய போலீஸாா் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த சக்திவேலின் உறவினரான ஆா்.வெள்ளோடு, கவுண்டன்புதூரைச் சோ்ந்த தங்கராஜ் (37) என்பவரை கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆடு, மாடுகளைத் திருடி வாரச் சந்தைகளில் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT