திருப்பூர்

பொதுத் துறை வங்கிகள் காலை 10 முதல் 4 மணி வரையில் செயல்படும்

1st Oct 2019 05:25 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் செவ்வாய்க்கிழமை முதல் காலை 10 முதல் மாலை 4 மணி வரையில் செயல்பட உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ந.சத்தியமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைத்து பொதுத் துறை வங்கி வாடிக்கையாளா்களுக்காக பொதுவான வங்கி நேரத்தை மேற்கொள்ளும்படி இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு அறிவுறுத்தி இருந்தது. இதன் தொடா்ச்சியாக, திருப்பூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாவட்ட வங்கியாளா்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் அலுவல் நேரம் அக்டோபா் 1 ஆம் தேதி முதல் காலை 10 முதல் 4 மணி வரையில் செயல்படுத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதன்படி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுத் துறை வங்கிகள் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரையில் செயல்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT