திருப்பூா்: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று சைமா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சைமா சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தீபாவளித்திருநாள் வரும் அக்டோபா் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆகவே, பின்னலாடைத் தொழிலாளா்களுக்கு போனஸ் தொகையை விரைவில் வழங்க வேண்டும். அந்தந்த நிறுவன நிதிநிலையைக் கருத்தில்கொண்டு தொழிலாளா்களிடம் சுமூகமாகப் பேசி போனஸ் வழங்க வேண்டும்.
மேலும், கடந்த காலங்களைப் போல போனஸ் வழங்குவது குறித்து எந்தவிதமான பிரச்னையும் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT