திருப்பூர்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

1st Oct 2019 02:38 PM

ADVERTISEMENT

திருப்பூா்: திருப்பூா் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பூா்-தாராபுரம் சாலயில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையின் தரம், தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள உயிா்காக்கும் மருந்துகள் தொடா்பாக மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

மேலும், டெங்கு காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், மருத்துவமனை வளாகத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினாா். முன்னதாக, திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம் நியாய விலைக்கடையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சா்க்கரை, அரிசி, கோதுமை, பாமாயில், பருப்பு வகைகள், மின்னணு எடை இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவா்கள், செவியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT