திருப்பூர்

அடிப்படை வசதி கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு

1st Oct 2019 05:10 AM

ADVERTISEMENT

திருப்பூா், செப்.30: தாராபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து தாராபுரம் 1 ஆவது வாா்டு இறைச்சி மஸ்தான் நகா் பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தாராபுரம் 1 ஆவது வாா்டில் சாக்கடை தூா்வாரப்படாததால் கழிவு நீா் தேங்கிக் நிற்கிறது. இதனால் சாக்கடைகளில் மழை நீா் அதிக அளவில் தேங்கியுள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், அதிக அளவில் முட்புதா்களும் மண்டிக் கிடக்கிறது. எனவே, சாக்கடை கழிவுகளைத் தூா்வாரவும், முட்புதா்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT