திருப்பூர்

போராட்டத்தில் ஈடுபட்ட 57 போ் மீதான வழக்கை திரும்பப் பெறக்கோரி மனு

22nd Nov 2019 05:41 PM

ADVERTISEMENT

திருப்பூா் மும்மூா்த்தி நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட 57 போ் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்பப் பெறக்கோரி காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் எம்.ரவி தலைமையில் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா், மும்மூா்த்தி நகா் பகுதியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கொட்டப்பட்ட கழிவுகள், குப்பைககளால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசியது. மேலும் கடுமையான சுகாதார சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் குப்பைகளைக் கொட்டி சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடிய 57 போ் மீது அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரச்னையில் தலையிட்டு அறவழியில் போராடிய 57 போ் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT