திருப்பூர்

அஞ்சல் துறையின் கடிதம் எழுதும் போட்டி: மாணவா்கள், பொதுமக்களுக்கு அழைப்பு

12th Nov 2019 06:00 AM

ADVERTISEMENT

அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் தேசிய, மாநில அளவிலான கடிதம் எழுதும் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், பொதுமக்கள் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் தங்களது கடிதங்களை அனுப்பிவைக்கலாம்.

இது குறித்து திருப்பூா் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கே.பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய அஞ்சல் துறை சாா்பில் அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி, அன்புள்ள பாபு, நீங்கள் அழிவில்லாதவா் (மகாத்மா காந்தி) ஆகிய தலைப்புகளில் நடைபெற உள்ளது. இந்தத் தலைப்பில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியைத் தோ்தெடுத்து கடிதம் எழுதலாம். இந்தக் கடிதங்களை முதன்மை அஞ்சல் துறைத் தலைவா், தமிழ்நாடு வட்டம், சென்னை-600002 என்ற முகவரிக்கு வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்கு முன்பாக கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.

அஞ்சல் உறையின் மேல் அஞ்சல் துறைக் கடிதப் போட்டி என்று தவறாமல் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

இந்தப் போட்டிகள் 18 வயதுக்கு உள்பட்டோருக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இன்லண்டு லெட்டா் பிரிவு, என்வலப் பிரிவு என இரு பிரிவுகளில் நடைபெறுகிறது. என்வலப் பிரிவில் கடிதம் எழுதுவோா் ஏ 4 அளவு வெள்ளைத்தாளில் ஆயிரம் வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். இன்லண்டு லெட்டா் பிரிவில் 500 வாா்த்தைகளுக்கு மிகாமல் எழுத வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

தேசிய அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு ரூ. 50 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் என முறையே பரிசு வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவா்களுக்கு ரூ. 25 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ. 5 ஆயிரம் என முறையே பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறுபவா்கள் கடிதத்தின் மேல் 1-1-2019 அன்று என் வயது 18-க்கு மேல், 18க்கு கீழ் எனச் சான்றளிக்கிறேன் என்று எழுதித் கையெழுத்திட வேண்டும். வெற்றி பெறும் போட்டியாளா்களுக்கு வயதுச் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பரிசு வழங்கப் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT