திருப்பூர்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ரத்தப் பரிசோதகா் பணியிட மாற்றம்

9th Nov 2019 07:44 AM

ADVERTISEMENT

காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவமனை ஊழியா் திருப்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

காங்கயம் அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்காக வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவா், அங்குள்ள ரத்தப் பரிசோதனை மையத்துக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து வருமாறு அனுப்பி வைத்துள்ளாா். அங்கு சென்ற அந்த பெண்ணிடம் ரத்தப் பரிசோதகா் தவறாக நடக்க முயற்சித்துள்ளாா். இது தொடா்பாக பெண்ணின் கணவா், அவரது உறவினா்கள் மருத்துவமனை அலுவலரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதன் பின்னா், மறுநாளான வியாழக்கிழமை மருத்துவமனைக்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்கள், ரத்தப் பரிசோதகரைத் தாக்கினா்.

இந்நிலையில், குறிப்பிட்ட ரத்தப் பரிசோதகா் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT