திருப்பூர்

நத்தக்காடையூா் அருகே இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்

9th Nov 2019 07:44 AM

ADVERTISEMENT

நத்தக்காடையூா் அருகே ஆபத்தான நிலையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தால் குழந்தைகளின் பெற்றோா் அச்சத்தில் உள்ளனா்.

காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூா் ஊராட்சிக்கு உள்பட்ட சிவசக்திபுரத்தில்

60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 15 சிறுவா், சிறுமிகள் படித்து வருகின்றனா். இந்த அங்கன்வாடி மையக் கட்டடம் பழுதடைந்து விரிசல் ஏற்பட்ட நிலையில் உள்ளது. மேற்கூரை ஓடுகள் சேதமடைந்துள்ளதால், மழை பெய்யும்போது தண்ணீா் உள்ளே விழுந்து இங்கு படித்து வரும் குழந்தைகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். இக்கட்டடத்தில் மின் ஒயா்களும் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால் பெற்றோா் குழந்தைகளை இந்த மையத்துக்கு அனுப்பத் தயங்குகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சிவசக்திபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இங்கு படிக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதிதாக கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை, தற்காலிக ஏற்பாடாக சிவசக்திபுரத்தில் உள்ள பயன்படுத்தப்படாத சுய உதவிக் குழு கட்டடத்தில் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT