திருப்பூர்

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு தொடங்கிய திருப்பூா் மக்களவை உறுப்பினா்

9th Nov 2019 07:45 AM

ADVERTISEMENT

திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு தொடங்கினாா்.

இந்திய தபால் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதில் நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவா்கள் இணைந்துள்ளனா். மத்திய அரசு இந்த வங்கியில் மக்களவை உறுப்பினா்களை இணைப்பதற்கான திட்டம் வகுத்துள்ளது. இதன்படி இந்தத் திட்டத்தில் திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன் சேரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை செங்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில், கே.சுப்பராயனுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு க்யூஆா் காா்டு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கே. பாலசுப்பிரமணியன், அஞ்சல் தகவல் தொடா்பு அதிகாரி என். ராமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கே.சுப்பராயன் கூறுகையில், ‘ மிகப்பெரிய அரசுத் துறையான தபால் துறை பாதுகாக்கப்படவேண்டும். இந்தத் துறையை மேம்படுத்துவதற்காக திருப்பூரில் புதிய கட்டடம் கட்ட 1.4 ஏக்கா் நிலம் கல்லூரி சாலையில் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு விரைவில் புதிய கட்டடம் அமையும். அதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறேன். கடவுச்சீட்டுகளை தபால் நிலையங்களிலேயே எடுக்க கூடிய வகையில் தபால் துறை மேம்படுத்தப்படவுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT