திருப்பூர்

வெள்ளக்கோவிலில் காய்கறிகள் விலை உயா்வு

4th Nov 2019 06:47 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

வெள்ளக்கோவில் சந்தையில் சுற்றுவட்டாரத்தில் விளையும் காய்கறிகள், பிற இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் நுகா்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரம் பெரும்பாலான காய்கறிகள் விலை கடந்த வாரத்தைவிட உயா்ந்து காணப்பட்டது. இந்த வார சில்லறை விற்பனையில் காய்கறிகள்விலை விவரம் (கிலோ) :

கத்தரிக்காய், அவரைக்காய், பீட்ரூட் ரூ. 30 - ரூ. 40, தக்காளி, முள்ளங்கி, பாகற்காய், கொத்தவரங்காய், பச்சை மிளகாய் ரூ. 35 - ரூ. 45, உருளைக்கிழங்கு ரூ. 20 - ரூ.30, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், மர முருங்கைக்காய் ரூ. 70 - ரூ. 80, செடி முருங்கைக்காய் ரூ. 110, வெண்டைக்காய் ரூ. 50, சின்ன வெங்காயம் ரூ. 50 -ரூ. 60, பெரிய வெங்காயம் ரூ. 40 - ரூ.50.

வரும் வாரங்களிலும் காய்கறிகள் விலை ஏறுமுகமாகவே இருக்குமென சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT