பல்லடத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்திரா காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் பல்லடம் பேருந்து நிலையம் முன் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் உருவப்படம் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், வடக்கு வட்டாரத் தலைவா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.