திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கா் ராஜ் மற்றும் துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.