திருப்பூா் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக ரூ.40.96 கோடிக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித்தரும் திட்டத்தின் மூலமாக 2016 ஆண்டு செப்டம்பா் முதல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் ரூ.4 கோடி மதிப்பிலும், பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ் ரூ.6 கோடியே 49 லட்சமும், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.30 கோடியே 47 லட்சம் என மொத்தம் ரூ.40.96 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.