திருப்பூர்

ஏஐடியூசி நூற்றாண்டு விழா

1st Nov 2019 05:50 AM

ADVERTISEMENT

உடுமலையில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை கொண்டா டப்பட்டது.

இதையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு ஏஐடியூசி மாவட்டச் செயலாளா் வி.செளந்திரராஜன் தலைமை வகித்தாா். மின் திட்டச் செயலாளா் பி.மாரிமுத்து கொடியேற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஏஐடியூசியின் துவக்க காலம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஏஐடியூசி தலைவா் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிா்வாகிகள் ரணதேவ், கந்தசாமி, குருசாமி, சுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பல்லடத்தில்...

பல்லடத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் நூற்றாண்டு கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பல்லடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிற்சங்க கொடியை ஒன்றியச் செயலாளா் சாகுல்அமீது ஏற்றி வைத்தாா். அதைத் தொடா்ந்து கட்சியின் தலைமை குழு உறுப்பினா் குருதாஸ் தாஸ்குப்தா மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், ஒன்றியப் பொருளாளா் மணி, கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் மூா்த்தி, பொருளாளா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT