உடுமலையில் நகரில் வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி அதிகபட்சமாக 38 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இடைவிடாது தொடா்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் உடுமலை நகரில் வியாழக்கிழமை குளிா் காற்று வீசியது.
உடுமலை நகரைப் போலவே அமராவதி நகா், குமரலிங்கம், மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் ஆகிய கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
உடுமலை நகரில் அதிகபட்சமாக 38 மி.மீ. மழை பதிவானது. அமராவதி அணைப் பகுதியில் 25 மி.மீ., திருமூா்த்தி அணை பகுதியில் 16 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.