திருப்பூா் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் படுகாயம் அடைந்தாா்.
கரூரைச் சோ்ந்தவா் ராஜகோபால் (65), விவசாயி. இவா் பல்லடம் சென்று விட்டு மீண்டும் கரூா் செல்வதற்காக காங்கயம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அப்போது, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இருந்து திருப்பூா் செல்லும் அரசுப் பேருந்து காங்கயம் பேருந்து நிலையத்துக்குள் நுழையும்போது, ராஜகோபால் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜகோபால் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுகுறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரசுப் பேருந்து ஓட்டுநா் பாரதியிடம் (42) விசாரித்து வருகின்றனா்.