உடுமலையை அடுத்துள்ள பள்ளபாளையம் ஷிரி ஆதர்ஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிர்ப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளி நிர்வாகமும், தமிழ்நாடு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜீ.ஜீவராஜ் அலெக்சாண்டர் தலைமை வகித்தார்.
இதில், "வேண்டாமே போதைப் பொருள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜ், சக்திவேல் ஆகியோர் போதைப் பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் மாணவர் ரஞ்சன் முத்து நன்றி கூறினார்.